×

பிரபல இயக்குனர் விக்ரமனின் உறவுக்கார பெண்ணின் வாகனம் திருட்டு

சென்னை: பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தை போல படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். இவர், சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு உறவினரின் பெண் ஒருவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் வந்தார். வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். அப்போது, வாகனத்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தனர். 2 இளைஞர்கள் முகத்தை மூடியவாறு இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அசோக் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

The post பிரபல இயக்குனர் விக்ரமனின் உறவுக்கார பெண்ணின் வாகனம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Vikraman ,Chennai ,Poove ,Unakaga ,Suryavamsam ,Vanatha Pola ,Ashok Nagar, Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...